முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கல்விக்கென்று 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: வேலூர் ஜெசிஐ மாநாட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      வேலூர்
Image Unavailable

 

வாலாஜாப்பேட்டை சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஜெ.சி.ஐ. மண்டல மாநாட்டிற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். முன்னதாக அவருக்கு வாலாஜா சுங்க சாவடியில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர்அணி செயலாளர் ஏழுமலை ஆகியோர் பூங்கொத்து கொடுத்து பட்டாசுகள் வெடித்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு

 

இந்நிகழ்ச்சியில் வாலாஜாப்பேட்டை சில்க் சிட்டி ஜெ.சி.ஐ. 26வது மண்டல மாநாட்டிற்கு வருகை புரிந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது: வாலாஜாப்பேட்டை நகரத்தில் சவுராஸ்ட்ரா, இந்துக்கள், முஸ்லிம், கிருத்துவர்கள் வாழும் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்;ந்து வருகிறார்கள் என்பதில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொண்டு செய்வது, நாட்டு பண்பு உள்ளவர்கள் இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டு உதவிகள் வழங்குவதில் சிறந்து விளங்குகின்றனர். நானும் பள்ளி பருவம் முடித்து பட்டபடிப்பு முடித்து சிறிது காலம் விவசாயம் செய்தேன் பின்னர் டீ கடையும் வைத்திருக்கிறேன். அப்போது நான் 1972-ல் லயன்ஸ் கிளப்பில் செயலாளர்ராகவும், போடிநாயக்கனூரில் 1984-ல் ரோட்டரியின் செயலாளர்ராக இருந்து இருக்கிறேன். எங்கள் ஊரில் ஜெ.சி.ஐ. இருந்து இருந்தால் அதிலும் நான் உறுப்பினராக இருந்து இருப்பேன். பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை ஜெ.சி.ஐ வாலாஜா நகரத்தில் 15இடங்களில் வைத்து குடிநீர் வழங்கி பாராமரித்து கொண்டு இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் வரி பணத்தில் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சிதலைவி அம்மா மக்கள் பயன் அடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். புரட்சிதலைவி நம்மைவிட்டு பிரிந்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு கல்விக்கென்று 26ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதில் புரட்சிதலைவி அம்மா அவர்களின் சீறிய திட்டத்தின் கீழ் 16வகையான கல்வி உபகரணங்கள், இலவச கல்வி, இலவச மடிகணினி, மிதிவண்டி, புத்தகம், சீருடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மாணவ மாணவிகளுக்கு செய்து இன்று தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்து இருக்கிறது. மேலும் கல்வி தேர்ச்சி சதவீதத்தில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டு கல்விதுறை தரம் உயர்ந்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பொருட்காட்சி

 

இதனை தொடர்ந்து மண்டபத்தின் கீழே வைக்கப்பட்ட பெருட்காட்சியை பார்வையிட்டார். பின்னர் நிலவேம்பு குடிநீர் மக்களுக்கு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.அரி, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், முன்னாள் அமைச்சர் முகமதுஜான், முன்னாள் மாவட்ட செயலாளர் அப்பு, நகர செயலாளர்கள் ஜி.மோகன், என்.கே.மணி, விஷாரம் இப்ராகிம் கலிமுல்லா, முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி, ஒன்றியசெயலாளர்கள் பூங்காவனம், தாஜ்புரா குட்டி, முன்னாள் நகரமன்ற தலைவர் சித்ராசந்தோஷம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், துரை, மாணவர்அணி செயலாளர் விபி.நாராயணன், முன்னாள் நகரசெயலாளர் ஜெயதேவன், முன்னாள் நகரமன்ற துணைதலைவர் மூர்த்தி, மற்றும் ஜெ.சி.ஐ சார்ந்த நெல்லி குப்புசாமி செட்டி, முன்னாள் தேசிய தலைவர்கள் வெள்ளப்பதாஸ், ராஜன்பாபு, செயல் அலுவலர் வினோத்குப்தா, மண்டல தலைவர் சுரேஷ், ராஜேஸ்வரி சத்தியமூர்த்தி, சத்தியமூர்த்தி, சேர்மன் ரகுநாத், மற்றும் ஜெ.சி.ஐ நிர்வாகிகள் ஏ.எஸ்.முருகானந்தம், பு.பாலாஜி, டீ.கே.குமார், ஆர்.ரத்தினகுமார், அ.சரவணன், ஆர்.சிவசக்திவேலன், வெங்கடேஸ்வரா எலக்ரானிக்ஸ் உரிமையாளர் சினிவாசன், ஜெகன் பாபு, பால்ராஜ், முருகானந்தம், குமார், உள்ளிட்ட ஜெ.சி.ஐ குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து