முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை மதர்தெரசா செவிலியர் கல்லூரியில் செவிலியர் மாநாடு: முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      புதுச்சேரி

இந்திய மகப்பேறு செவிலியர்கள் சங்கம், புதுச்சேரி கிளை நடத்திய “இந்திய மகப்பேறு செவிலியர்கள் மாநாடு”, மதர் தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கலையரங்கில்  நடைப்பெற்றது. இவ்விழாவை அந்நிறுவனத்தின் செவிலியர் பள்ளி முதன்மை அதிகாரி டாக்டர். பிரமிளா தமிழ்வாணன்  ஒருங்கினைந்து நடத்தினர்

மாநாடு

புதுவை முதல்வர்  நாராயணசாமி  முன்னிலையில் மாநாடு துவங்கப்பட்டு சிறப்புரை ஆற்றப்பட்டது. அவர் பேசும்போது மாநாட்டின் முக்கியத்துவத்தையும் புதுச்சேரியில் கடந்த எட்டு (8) வருடங்களாக இந்திய மகப்பேறு செவிலியர்கள் சங்கத்தின் ஆக்கப்பூர்வமான செயர்படுகளையும், அதனால் புதுச்சேரி சுகாதாரத்துறை கண்ட பயன்பாட்டினையும் விளக்கி பேசினார். மேலும் தற்போது இச்சங்கத்தின் இணை செயலாளர் டாக்டர். பிரமிளா தமிழ்வாணன் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதையும் பாராட்டி பேசினார். இச்சங்கத்தின் கடந்த 8 ஆண்டுகால செயல்பாட்டினை புதுவை இணை செயலாளர் டாக்டர். பிரமிளா தமிழ்வாணன்  வாசித்தார். மேலும் இம்மாநாட்டினை சிறப்பிக்கும்படி, புதுவை மாநில சுகாதார துறை அமைச்சர்.  மல்லாடி கிருஷ்ணராவ், புதுவை சுகாதார துறை அதிகாரி  Dr. K.V. ராமன், மதர்தெரசா கல்லூரி முதல்வர்  முரளி கலந்துகொன்டனர். அம்மாநாட்டிற்காக பல்வேறு மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, மும்பை, கல்கட்டாவிலிருந்து விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு தங்களது அறிவுப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொன்டதில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் பயனடைந்தனர்.கலந்த கொன்ட விரிவுரையாளர்களுக்கு இருப்பிட வசதி, போக்குவரத்து மற்றும் உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, நமது புதுவையின் காலாச்சார பண்பாட்டு கலைகளை செய்து புதுவையின் பெருமையை வெளிபடுத்தினார்கள் மாநாட்டில் சிறப்பாக சேவை செய்து கொண்டிருக்கின்ற செவிலியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மற்றும் சங்க பொறுப்பாளர்களுக்கும் பாராட்டு, விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை புதுவை முதல்வர் நாராயணசாமி  வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து