முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கை தூய்மை திட்டம் தொடங்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம்: உமாபாரதி உறுதி

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி :  கங்கையை தூய்மைப் படுத்தும் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் தொடங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்தார்.

டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது,

புனித நதியான கங்கை நதியை சுத்தப்படுத்தும் விஷயத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கங்கையை சீரமைக்கும் திட்டங்கள் உடனே தொடங்கப்பட வேண்டும்.

2018 அக்டோபர் மாதத்திற்குள் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அவை திட்டமிட்டபடி அமல்படுத்தப்பட வேண்டும்.
கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் குறிப்பிட்ட காலத்துக்குள் தொடங்கப்பட வேண்டும்.

அவ்வாறு நடைபெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்குவதை தவிர வேறு வழியில்லை. உத்தரபிரதேசத்தில் பிரயாகையில் உள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து