முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் கோயில் விவகாரத்தை தேர்தலுடன் இணைக்கிறது காங்கிரஸ் : பிரதமர் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத்: ராமர் கோயில் விவகாரத்தை மக்களவை தேர்தலுடன் காங்கிரஸ் இணைக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

ராம ஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல், சன்னி வக்பு வாரியம் சார்பில் வாதிட்டு வருகிறார். இந்த வழக்கில் கபில் சிபல்  வாதிடும்போது, “2019 மக்களவை தேர்தல் முடியும் வரை இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் தந்துகா என்ற இடத்தில் நேற்று நடந்த பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, “உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி தரப்பினருக்காக கபில் சிபல் வாதிடுகிறார். இது அவரது உரிமை. அதில் நமக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஆனால் 2019 வரை இந்த வழக்கை அவர் தள்ளிவைக்க கோருவது சரிதானா? எதற்காக அவர் ராமர் கோயில் விவகாரத்தை தேர்தலுடன் இணைக்கிறார்? இத்தகைய சிந்தனை சரியானதா? ராமர் கோயில் விவகாரத்தை மக்களவை தேர்தலுடன் காங்கிரஸ் இணைக்கிறது. தேசத்தை பற்றி அக்கட்சிக்கு துளியும் கவலை இல்லை” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து