முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீனம் குறித்த நிலைப்பாடு என்றும் மாறாது: இந்தியா உறுதி

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு சுதந்திரமானது. மற்ற நாடுகளின் நிலைப்பாடு மாறுவதால் எங்கள் தரப்பு மாறாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
‘‘பாலஸ்தீனம் குறித்த எங்கள் நிலைப்பாடு சுதந்திரமானது. சர்வதேச நலன் அடிப்படையில் மட்டுமே எங்கள் நிலைப்பாட்டை தீர்மானிக்கிறோம். மூன்றாம் நாட்டின் எண்ணங்களின் அடிப்படையில் எங்கள் கருத்தை நாங்கள் உருவாக்க முடியாது. பாலஸ்தீனம் சுதந்திரமான நாடு என்ற ஆதரவை நீண்டகாலமாக நாங்கள் தெரிவித்து வருகிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து இந்தியா தரப்பில் நேரடியாக விளக்கம் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

முன்னதாக, அதிபர் டிரம்ப், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை, ஜெருசலேம் நகருக்கு மாற்றும் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறி அரபு நாடுகளின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கூறுகையில் ‘‘அமெரிக்காவின் முடிவு இருதரப்புக்கும் மத்தியஸ்தம் செய்யும் நடுநிலையில் இருந்து அந்நாட்டை தவற செய்து விடும். பாலஸ்தீனத்தின் தார்மீக தலைநகர் ஜெருசலேம். இதில் எந்த மாற்றமும் இல்லை’’ எனக்கூறினார்.

இதுகுறித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில் ‘‘அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவு வரலாற்று சிறப்புமிக்கது. அமைதி பேச்சுவார்த்தையை இது முன்னெடுத்துச் செல்லும்’’ எனக்கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து