முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவில் தரிசனத்துக்கு போலி டிக்கெட் விற்பனை: மும்பை தனியார் ஏஜன்சி மீது நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மும்பையை சேர்ந்த 192 பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக 300 ரூபாய் கட்டண டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்தனர்.

திருமலையில் கட்டண நுழைவாயில் வழியாக அவர்கள் சென்றனர். அதிகாரிகள் அவர்களின் டிக்கெட்டுகளை பரிசோதித்த போது அதில் 4 டிக்கெட்டுகள் தவிர மற்றவை போலி என தெரியவந்தது.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த மும்பை பக்தர்கள் மும்பை தனியார் ஏஜன்சியிடம் இந்த டிக்கெட்டுகளை வாங்கியதாக கூறினர். இதையடுத்து தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, விசாரணை நடத்தி மும்பை பக்தர்களுக்கு மாற்று ஏற்பாடு மூலம் தரிசனம் செய்ய வழிவகுத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இது குறித்து தேவஸ்தான பறக்கும் படை அதிகாரி சதாலட்சுமி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் மும்பையை சேர்ந்த தனியார் ஏஜன்சியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து