முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புஜாரா ஹேண்ட் பிரேக்குடன் ஓடும் கார் சுனில் கவாஸ்கர் கிண்டல்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இந்தியா - இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் ஃபீல்டிங் மோசமானதாக இருந்தது என முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆட்டம் டிரா
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்ஸின் கடைசி நாளில் இந்திய வீரர்களின் ஃபீல்டிங் மோசமானதாக இருந்தது. குறிப்பாக ஸ்லிப்பில் நின்ற வீரர்கள் கோலி உட்பட பலரது ஃபீல்டிங் மோசமானதாக இருந்து. வெற்றி பெறும் நிலையில் இருந்த கடைசி டெஸ்ட் இந்திய வீரர்களின் மோசமான செயல்பாட்டால் ஆட்டம் டிரா ஆனது.

கவாஸ்கர் கருத்து
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர், இந்திய வீரர்கள் புஜாரா, அஸ்வினின் ஃபீல்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். புஜாரா பந்தை துரத்திக்கொண்டு எல்லைக்கோடு வரை ஓடுவதை பார்த்தால் ஹேண்ட் பிரேக்குடன் ஓடும் கார் போல காணப்படுகிறார். அதேபோல் அஸ்வினுக்கு பந்தை தடுக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது ஆனால் அது செயலில் வெளிப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து