முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை பார்க் குளோபல் பள்ளியின் ஆண்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      கோவை
Image Unavailable

பார்க் பார்க் குளோபல் பள்ளியின் ஆண்டு விழா “ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட்” என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் முதல்வர் எச்.நடராஜன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வருடாந்த அறிக்கையை வாசித்தார்.
விழாவில் பார்க் நிறுவன குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர் ஆர்.அனுஷா, தலைமை வகித்து பேசியதாவது - “கடந்த பத்து வருடங்களாக தங்களது துறையில் சாதனை புரிந்த ஒரு இளைஞனை காண்பது மிக கடினமாக உள்ளது. நான் திட்டமிட்ட படி எல்லா வேலைகளும் நடந்ததால் தான் நான் இப்போது உள்ள நிலையில் உள்ளேன் என்று கூறும் ஒரு நபரும் இந்த உலகில் இல்லை. குழந்தைகளுக்கு சரியான வெளிப்பாடு கொடுத்தால் மட்டுமே  வாழ்க்கையில் சிறப்படையலாம். பள்ளியில் குழந்தைகளை கொடுக்கும் வெளிப்பாடு குழந்தைகளுக்கு நாம் வழங்கக் கூடிய சிறந்த கல்வி ஆகும்” கடின உழைப்புக்கு மாற்றீடில்லை, “பணக்காரரும் திறமையுமானவர்களும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற இந்த விதி அனைவருக்கும் பொருந்தும். ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் தேவையில்லை.  ஒரு மகிழ்ச்சியான இதயத்துடன் ஒரு குழந்தை எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் வாழ முடியும்”.
விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல பிபிஏ மாணவியும், இணைய வலை வடிவமைப்பாளருமான, பெண் தொழிலதிபர் மற்றும் உலகில் இளைய தலைமை நிர்வாக அதிகாரியான செல்வி. ஸ்ரீலக்ஷ்மி சுரேஷ், கலந்து கொண்டார். இவர் இணைய வலை வடிவமைப்பதில் அவரது அபூர்வமான சாதனைக்காக “தேசிய குழந்தை விருது” பெற்றார். இந்த விருது 2008 ஆம் ஆண்டு புது டெல்லியில் திருமதி. சோனியா காந்தி அவர்களால் வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீலக்ஷ்மி சுரேஷ் பேசியதாவது - “பள்ளியின் நாம் கழிக்கும் நாட்களே நம்வாழ்வின் சிறந்த நாட்களாகும். துரதிருஷ்டவசமாக, நாம் பள்ளி படிப்பை முடித்தபிறகே தான் இதை உணர்கிறோம். நான் எட்டு வயதில் மூன்றாம் வகுப்பில் இருந்த போதே வலைத்தளங்களை வடிவமைப்பதற்கான திறமை எனக்கு இருப்பதை என் தந்தை தான் கண்டுபிடித்தார். அவர் என் திறமை பற்றி என் பள்ளி முதல்வரிடம் கூறினார். அவர் எனது திறமையை சோதிக்க என் பள்ளி வலைதளத்தை வடிவமைக்க என்னை கேட்டுகொண்டார், நான் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள பிரசென்டேஷன் உயர்நிலைப்பள்ளியின் வலைத்தளத்தை பதட்டத்துடன் வடிவமைத்து முடித்தேன்”.
வயது எனக்கு முக்கியத்துவம் கொடுத்தது, ஊடகம் எனக்கு அங்கீகாரம் அளித்தது மற்றும் விருதுகள் எனக்கு சிறந்தவற்றை வழங்க எனக்கு அழுத்தம் அளிக்கிறது. நான் எட்டு வயதிருக்கும் போதே வலைத்தளங்களை வடிவமைப்பதற்கான ஆர்டர்களை ஏற்றுக்கொண்டேன். நான் என் நிறுவனத்தை ஆரம்பித்ததிலிருந்து, 300 க்கும் மேற்பட்ட வலைத்தளங்களை வடிவமைத்திருக்கிறேன். விவேகமே வெற்றியை தரும் என்ற மந்திரமே வணிகத்தில் வெற்றியை தரும். கூகிள் மற்றும் பேஸ்புக் ஒரே நாள் ஏற்படுத்தப்படவில்லை” மாணவர்கள் தங்கள் ஆர்வத்தை தங்கள் தொழிலாக செய்ய ஊக்குவித்து, “இன்று நாம் நமது தேவைகளுக்காக நமது பெற்றோரை சார்ந்துள்ளோம். நீங்கள் சம்பாதித்த பணத்தை கொண்டு நீங்கள் விரும்பும் அனைத்தையும் வாங்கிக் கொள்ளும் சூழ்நிலையைப் பற்றி யோசியுங்கள். நீங்கள் வணிகத்தில் உங்கள் ஆர்வத்தை காட்டினால் உங்கள் பணத்தை சம்பாதிக்க முடியும். “என்று அவர் கூறினார். வழக்கத்திற்கு அப்பால் சிந்திக்கும் திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் வாழ்வதற்கான ஒரு நல்ல இடமாக உலகத்தை மாற்ற விரும்பினால், நாம் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும். நிலைமைக்கு வெளியாக யோசியுங்கள். மகிழ்ச்சி ஒரு இலக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது வாழ்க்கைக்கான ஒரு வழி. உங்கள் கனவுகளைத் தொடருங்கள் “என செல்வி ஸ்ரீலக்ஷ்மி சுரேஷ் பேசினார்.
விழாவில் பார்க் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர்.பி.வி.ரவி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் Nபிசயதாவது - இந்த தற்காலத்திய சமூகத்தில் இளையதலை முறையினர் தங்களது மென்பொருள்களின் தொழில்நுட்பத்தை சார்ந்து அவர்களின் நினைவக சக்தியை இழக்கின்றனர். துரமான கல்வி மற்றும் பாட திட்டம் சாராத செயல்பாடுகளே ஒரு தனி நபரை முழுமையாக்குகிறது. இந்த நவீன காலத்தில், ஒரு உண்மையான ஆசிரியரை கண்டுபிடிக்க கடினமாக உள்ளது” என்று டாக்டர் பி. வி. ரவி கூறினார். மாணவர்கள் தங்கள் முயற்சியில் நல்ல அதிர்ஷ்டத்தை வாழ்த்தி அவர் தனது உரையை முடித்தார்.
இதை தொடர்ந்து “ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட்” என்ற தலைப்பில் கண்கவர் கலாச்சார நிகழ்ச்சியை மாணவர்கள் வழங்கினர்.  வழங்கிய பழங்குடி நடனம், திருவிழா, பன்னி பன்ச், ராம்ப் வாக், தில்லானா ஃப்யூஷன், கேரள ஃபியூஷன், மினியன்ஸ், ரஷ்ய போல்கா, இராணுவ ஹிப்-ஹாப் மற்றும் பா{ஹபலி டான்ஸ் போன்றவை கண்களுக்கு விருந்தாக அமைந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகவும் நேர்த்தியாகவும் பிரமிக்கவைக்கும் வகையிலும் நடத்தப்பட்டு தலைப்பை நியாயப்படுத்தியது. விழாவில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து