முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு நந்தா கல்லூரியில் பட்டமளிப்புவிழா

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. முனைவர்.சரவணக்குமார் ஐ ஏ எஸ், துணைச்செயலாளர், உயர் கல்வித்துறை, மனித வள மேம்பாட்டு அமைச்சகம், நியூடெல்லி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 792 மாணவ, மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கி பாராட்டினார். இவ்விழாவிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வெ.சண்முகன் தலைமை தாங்கினாh. நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.குப்புசாமி ஆண்டறிக்கை வாசித்தனர்.
இப்பட்டமளிப்பு விழாவில் இளங்கலை உயிர் தொழில் நுட்பவியலைச்சார்ந்த 40 மாணவர்களும், கணிதத்துறையைச் சார்ந்த 58 மாணவர்களும், வணிக மேலாண்மை துறையைச் சார்ந்த 55 மாணவர்களும், வணிகவியல் கணிணிப் பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த 109 மாணவர்களும், வணிகவியல் நிர்மனச் செயல்பாட்டுத் துறையைச் சார்ந்த 49 மாணவர்களும் கணிணிஅறிவியல் மற்றும் கணிணிப் பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த 222 மாணவர்களும், ஆடை வடிவமைப்புத் துறையைச் சார்ந்த 32 மாணவர்களும், ஆங்கில இலக்கியத் துறையைச் சார்ந்த 55 மாணவர்களும, வணிகவியல் துறையைச் சார்ந்த 50 மாணவர்களும், முதுகலை இயற்பியல் துறையைச் சார்ந்த 15 மாணவர்களும், முதுகலை கணிதத் துறையைச் சார்ந்த 45 மாணவர்களும், முதுகலை உயிர் தொழில் நுட்பவியலைச் சார்ந்த 20 மாணவர்களும், முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டியல் சார்ந்த 42 மாணவர்களும், கலந்து கொண்டு பட்டம் பெற்றனர்.
இதில் பாரதியார் பல்கலைகழகத் தரவரிசையில், இளங்கலை ஆங்கில இலக்கியத் துறையைச் சார்ந்த மாணவி சந்தியாவதி இரண்டாம் இடத்தையும்,.சங்கீதா என்ற மாணவி ஐந்தாம் இடத்தையும்,.பூபாலகிருஷ்னன் என்ற மாணவன் ஆறாம் இடத்தையும், அம்பிகா என்ற மாணவி ஏழாம் இடத்தையும், அம்சவல்லி என்ற மாணவி எட்டாம் இடத்தையும்,.விஜிபிரியா என்ற மாணவி பத்தாம் இடத்தையும் பெற்றனர்.
உயிர் தொழிற்நுட்பவியல் துறை மாணவி.சங்கீதா இரண்டாம் இடத்தையும், கௌசல்யா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.  இளநிலை கணிதத்துறை சார்ந்த மாணவி ஹேமலதா நான்காம் இடத்தையும், விக்னேஷ்வரி என்ற மாணவி ஆறாம் இடத்தையும் பெற்றனர். வணிகவியல் நிர்மனச் செயல் பாட்டுத் துறையைச் சார்ந்த மாணவி சுரேகா ஆறாம் இடத்தையும் பெற்றனர். வணிக மேலாண்மை துறையைத் சார்ந்த ஜோரகை பாம் அகுராஜ்சிங்  என்ற மாணவன் ஆறாம் இடத்தையும் பெற்றனர்
முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டியல் சார்ந்த மாணவி ரேவதி ஆறாம் இடத்தையும், முதுநிலை உயிர் தொழிற்நுட்பவியல் துறை மாணவி காயத்ரி எட்டாம் இடத்தையும், முதுகலை இயற்பியல் துறையைச் சார்ந்த மாணவி.அஞ்சலி ஒன்பதாம் இடத்தையும், முதுகலை கணிதத்துறை சார்ந்த மாணவி.நந்தினி பத்தாம் இடத்தையும் பெற்றனர். 
இளம் பட்டதாரி மாணவர்களை பெரிதும் பாராட்டிய அவர் தமது விழாப் பேருரையில்இ
மேற்படி நிகழ்வுகளை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் திரு.ச.நந்தகுமார் பிரதீப் நிரல் பெறத் தொகுத்து வழங்கினார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை அதிகாரி முனைவர்.ச.ஆறுமுகம், நந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் முனைவா.செ.ப.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நந்தா கல்விநிறுவனங்களின் செயலர் ச.திருமூர்த்தி நன்றி கூறினார். இவ்விழா ஏற்பாடுகளை நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர்.வெ.ச.சீனிவாசன, துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து