முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி : மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேரகன் தலைமையில் ஏற்பு

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      அரியலூர்
Image Unavailable

 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேரகன் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

மாறாத பற்றுறுதி

மனித உரிமை நாள் உறுதிமொழிகள் வருமாறு, நான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகவும், இந்தியாவில் பின்பற்றப்பட்டு, செயல்படுத்தப்படுகிற பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகளின் வாயிலாகவும் பாதுகாக்கப்படுகிற அனைத்து மனித உரிமைகளின்பால் உண்மையான மற்றும் மாறாத பற்றுறுதி மிக்கவனாக இருப்பேன். அந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கான என்னுடைய அலுவல்கள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன்.

நான் எவ்வித வேறுபாடுமின்றி மனித உரிமைகளையும், அனைவரின் சுயமரியாதையையும் மதித்து நடப்பேன். நான் என்னுடைய சொல் அல்லது செயல் எண்ணங்கள் வாயிலாக பிறருடைய மனித உரிமைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீற மாட்டேன். மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நான் எப்போதும் கடமைப்பற்றுறுதி மிக்கவராக இருப்பேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புதிட்டம்) பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) சுரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து