முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை பாரத இயக்கம் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான சுகாதார பயிற்சி பட்டறை: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி ஆல்ப்ஸ் ஓட்டல் கூட்டரங்கில் தூய்மை பாரத இயக்கம் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான சுகாதார பயிற்சி பட்டறை கலெக்டர் சி.கதிரவன் நேற்று (12.12.2017) துவக்கி வைத்து உரையாற்றினார்.

 மாதிரி ஊராட்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம்(ஊ) திட்டம் செயல்படுத்துவது குறித்து தொண்டு நிறுவனம் இம்மாவட்டத்திலுள்ள அன்னை டிரஸ்ட், காவேரிப்பட்டிணம் என்னும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு விதமான பயிற்சிகள், வழிகாட்டுதல்கள், திட்டத்தினை செயல்படுத்துவதில் உள்ள இடர்ப்பாடுகள் களைதல் மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து காவேரிப்பட்டிணம் வட்டாரம் திம்மாபுரம், வேப்பனப்பள்ளி வட்டாரம் பில்லனகுப்பம் மற்றும் சூளகிரி வட்டாரம் சென்னப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை மாதிரி ஊராட்சிகளாக ஆய்வு செய்து ஆய்வு விவர இறுதி அறிக்கையினை மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தில் சமர்ப்பிக்க உள்ளதை தொடர்ந்து நேற்று நடைப்பெற்ற கருத்தாய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை ஏற்று சிறப்புரை வழங்கினார்.

மேலும், இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் நரசிம்மன், , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட அலுவலர் சந்திரா, செயற்பொறியாளர் (ஊ.வ), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முத்துசாமி, தொண்டு நிறுவனத்தின் எஸ். ஸ்ரீதரன், ஆலோசகர், ஆர்.ஷீலா, செயலர், அன்னை தொண்டு நிறுவனம், காவேரிப்பட்டிணம் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுலவர்கள்(கி.ஊ) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து