முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருகன்குளம் அரசு பள்ளியில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட வகுப்பறைகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி, அ.மனோகரன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தனர்

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      திருநெல்வேலி

அருகன்குளத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரன் ஆகியோர் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தனர்.

முப்பெரும் விழா

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சிவகிரி தாலுகாவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டுவிழா, அனைத்து வகுப்பறைகளிலும் கண்காணிப்பு கேமரா துவக்கி வைத்தல், வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட வகுப்பறை துவக்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் வைத்து நடந்தது. திருநெல்வேலி கலெக்டர் சந்தீப் நந்தூரி வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரன் தலைமை தாங்கினார்கள். ஊர் நாட்டாண்மை பிச்சை மணி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜோதி முருகன், வாசு ஒன்றிய அதிமுக செயலாளர் மூர்த்திப்பாண்டியன், மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சின்னத்துரை புளியங்குடி குருபால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சந்திரன் வரவேற்றார். கலெக்டர் சந்தீப்நந்தூரி பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரன் கண்காணிப்பு கேமராவினை துவக்கிவைத்தார். சிவகிரி இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வாசுதேவநல்லூர் ஏ.இ.இ.ஓ-க்கள் ராஜமுருகன், சண்முகசுந்தரபாண்டியன், ஆகியோர் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட வகுப்பறைகளை துவக்கி வைத்தனர். பள்ளிச்சுற்றுசுவர் கட்டுவதற்கு நன்கொடை வழங்கிய ராஜபாளையம் ஜனதாசெம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சின்னவெங்கட்ராஜா-க்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். விழாவில் தென்காசி ஆர்.டி.ஓ ராஜேந்திரன் வேளாண்மை இயக்குனர் பெருமாள், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் செய்யது இப்ராகிம் மூசா, ராஜபாளையம் ஐடிபிஐ வங்கியின் உதவி மேலாளர் அன்பரசு தேசிய விருதுபெற்ற நல்லாசிரியர் புரூஸ்டேனியல், மாரியப்பன் (எ) தங்கராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணைச்செயலாளர் மருதுபாண்டியன், வாசு தலைமையாசிரியர் ராமர், புளியங்குடி தங்கமாரியப்பன், சித்தநாதன், வின்னிங்ஸடார் நண்பர்கள் குழு, அக்கினிக் குஞ்சுகள் நண்பர்கள் குழு நிர்வாகிகள், செல்லையாத்தேவர் சிந்தாமணி கணேசன், செல்லத்துரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளியின் ஆசிரியர்கள் ஜெயகணேசன், அய்யர், 2 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த ஆசிரியர் அர்ச்சுனன் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் சித்திரைச் செல்வன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்டு வாசு எம்.எல்.ஏ. அ.மனோகரன் பேசும் போது சிறப்பாக செயல்பட்டுவரும் பள்ளியில் பணிபுரிந்து வரும் அத்தனை ஆசிரியர்களுக்கும் நன்றி, இன்றைய மாணவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு பரந்து விரிந்து படிக்க வேண்டும். படிக்கும் போது ஒவ்வொரு வரும் மாவட்ட ஆட்சியர் போல முன்மாதிரியாகவும், ரோல் மாடலாகவும் கொண்டு படிக்க வேண்டும். பள்ளிக்கு தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து பேவர்கல் பதித்து தரப்படும் என்றால்.

கலெக்டர் பேசும்போது ஒவ்வொரு தேவைக்கும் அரசினை எதிர்பார்க்காமல் இங்குள்ள ஆசிரியர்கள் ஒன்றுபட்டு பொதுமக்கள் உதவியோடு நல்ல செயல்கள் செய்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். பள்ளி குழந்தைகளின் வளர்ச்சியில் ஆங்கில கல்வி கூடங்களுக்கு இணையாக செயல்பட்டு வந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி. இதுபோன்ற மற்ற பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் பொது மக்களும் ஒன்று பட்டு கல்வியினை வளர்க்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து