முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் அருகே கடலில் மிதந்து ஒதுங்கிய புத்தர் சிலை

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      கடலூர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கிள்ளை அருகே உள்ளது எம்.ஜி.ஆர். திட்டு மீனவ கிராமம. இந்த கிராம மீனவர்கள் அதிகாலையில் படகில் கடலுக்கு மீன்பிடித்து விட்டு மாலை கரைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர் அந்த சமயத்தில் மூங்கில் கட்டைகளால் செய்யப்பட்டிருந்த தெப்பம் ஒன்று கடலில் மிதந்து வந்தது

புத்தர் சிலை

இதைபார்த்த மீனவர்கள் ஒகி புயலில் சிக்கிய யாரேனும் கரை ஓதுங்கிறார்களா என்று அருகில் சென்று பார்த்தனர் அப்போது மூங்கில் கட்டைகளால் ஆன தெப்பத்தில் 2அடி உயரம், 5 கிலோ எடை கொண்ட செப்புமுலாம் பூசப் பட்ட புத்தர் சிலை ஒன்று இருந்தது தெப்பத்தில் 15 அடி உயரத்தில் கொடி ஒன்று இருந்தது அந்த கொடி நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை அகிய வண்ணங்களில் இருந்தது மேலும் சிலையின் அருகில் 41 மண் கலசங்ள் பூஜை பொருட்கள் இருந்தன இது குறித்து மீனவர்கள் கிள்ளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் கிள்ளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து