முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் பூ மார்க்கெட் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி கலெக்டர் கு.கோவிந்தராஜ் பார்வையிட்டார்

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      கரூர்
Image Unavailable

 

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் வடக்கு, .வி.பி நகர், ஜவகர் பஜார், பூ மார்க்கெட் பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் நேற்று(16.12.2017) ஆய்வு மேற்க்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் வடக்கு, .வி.பி நகர் பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையேற்று முதல் தெருவில் சாலை அமைக்கவும், சின்டொக்ஸ் குடிநீர் தொட்டிக்கான மின் இணைப்பில் பழுது ஏற்ப்பட்டதை சரிசெய்ய கேட்டுகொண்டதற்கு இணங்க பணிகள் மேற்கொள்ளபட உள்ளன. .வி.பி நகர் இரண்டு மற்றும் முன்றாவது தெருக்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றப்பட்டு கழிவுநீர் காழ்வாய்களை தூர்வாரப்பட்டு வருவதுடன்.கெசுக்களை அழிக்கும் ரசாயன புகை அடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கரூர் ரயில் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையில் இருபுறமும் உள்ள குப்பைகளை அகற்றப்பட்டுள்ளது. பூ மார்க்கெட் கழிவுகளை பேடுவதற்காக தனி குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.பூ வியாபாரிகள் குப்பைகளை, குப்பைதொட்டிகளில் மட்டுமே போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலை ஒரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயனற்ற வண்டிகள் மற்றும் வாகனங்களை அப்புறபடுத்த அதன் உரிமையாளர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் கலால் சைபுதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், நகர் நல அலுவலர்(பொ); சுப்பிரமணியன், வட்டாட்ச்சியர் அருள் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து