முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரி 5,6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து - நடிகர் சங்கம் அறிவிப்பு

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, வருகிற ஜனவரி 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான 'நட்சத்திர விழா 2018' வரும் ஜனவரி 6-ஆம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அன்று முழுவதும் நடைபெறுகிறது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் மூத்த நடிகர், நடிகைகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள். மேலும் எல்லா நடிகர் - நடிகைகளும் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 5, 6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5, 6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து