சத்தியமங்கலத்தில் அனுமன் ஜெயந்தி விழா : லட்சுமணன், சீதை ஆகியோருடன் அருள்பாலிக்கும் ராமர்

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      ஈரோடு
SY17RAMAR

சத்தியமங்கலம் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி, ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவில் பக்தர்கள் சனிக்கிழமை பவானி ஆற்றில் இருந்து  தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கணபதி, மஹா கணபதி, சுதர்சன ஹோமங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, வீர ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டு  மகா அபிஷேக, அலங்கார பூஜையுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ராமர் லட்சுமணன், சீதை விக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடுகள் நடைபெற்றன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
அதே போல், ஸ்ரீ கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோயிலில் காலை பகவத் அனுக்ஞை, விஸ்வக்சேனர், ஆராதனை,மஹா சங்கல்பம், வாசுதேவ புண்யாகவாசனம் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி, உற்சவர், மூலவர் விஷேச திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
காலை 10 மணிக்கு மஹா தீபாரதனை, சாற்றுமுறை நிகழ்ச்சியை அடுத்து சுவாமிக்கு 1008 வடமாலையும் 1008 வெற்றிலை மாலையும் சாத்துதல் விழாவும் நடைபெற்றன.  விழாவில், ஆஞ்சநேய சுவாமி  வெள்ளிக்கவசம் அணிந்து மஹா அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து