முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை தூய உலக மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பாடல் போட்டி ரூ. 10 ஆயிரம் முதல் பரிசு: திரைப்பட பின்னணி பாடகர் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை தூய உலக மாதா ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பாடல் போட்டி முதலிடம் பிடித்த கூடலூர் பாடல் குழுவுக்கு ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசு திரைப்பட பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் வழங்கினார்.

பாடல் போட்டி

திருவண்ணாமலை தூய உலக மாதா ஆலயத்தில் 5ம் ஆண்டு தூய உலக மாதா பங்கு நடத்தும் கிறிஸ்துமஸ் பாடல் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மறைக்கோட்ட முதன்மை குரு கே.எஸ்.ஞானஜோதி தலைமை தாங்கினார்.. திரைப்பட பின்னணி பாடகர் கானாபாலா, இசை பேராசிரியர் ஜான்பிரிட்டோ, இசை இயக்குநர் எம்.ஏ.ஜெயக்குமார் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று கிறிஸ்துமஸ் பாடல் போட்டியினை நடத்தினர். இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற ஜமீன்கூடலூர் பாடல் குழுவுக்கு ரூ. 10 ஆயிரமும், தானிப்பாடி பாடல் குழுவுக்கு 2வது பரிசு ரூ. 5 ஆயிரமும், தேனிமலை பாடல் குழுவுக்கு 3வது பரிசு ரூ. 3 ஆயிரமும் பாராட்டு சான்றுகளும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை திரைப்பட பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் வழங்கி பாராட்டி சிறப்பு¬ராற்றினார். போட்டியில் கலந்து கொண்ட குழுக்கள் இயேசுவின் பிறப்பை பாடலின் மூலம் வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தி.மலை தூய உலக மாதா ஆலய உதவி பங்கு தந்தை பி.பிரகாஷ், திருத்தொண்டர் பி.தினேஷ், ஒருங்கிணைப்பாளர் ஒய்.ஜான்சன் ஏ.அமலன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து