முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் எரிவாயு சிக்கனம் தொடர்பான சைக்கிள் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் க.ராசாமணி தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி, அண்ணா நகர், தென்னூர் உழவர் சந்தை அருகில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கனம் தொடர்பான சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கு.இராசாமணி. நேற்று (17.12.2017) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சைக்கிள் பேரணி

சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து கலெக்டர் தெரிவித்தாவது: இந்த ஆண்டுக்கான எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கன பிரச்சாரத்திற்கான கருபொருள் ‘எரிபொருள்; சிககனத்தில் மக்களின் பங்களிப்பு’ ஆகும். இந்த சைக்கிள் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமானது எரிபொருள் சிக்கனத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏறபடுத்தவும் மேலும் ஆரோக்கியமான போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதற்கும் நடத்தப்பட்டது.

மக்களின் எரிபொருள் சேமிப்பு திறனை மேம்படுத்துவது மற்றும் சேமிப்பின் அவசியத்தையும் அதிலுள்ள பிரச்சினைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் புரிந்து கொண்டு பொட்ரோலியம் எரிபொருள்களை திறமையுடன் பயன்படுத்த வேண்டும். அனைவரின் ஒன்றுபட்ட பங்களிப்பே இவற்றை அடைவதற்கான திறவுகோலாக அமையும். இவை குறித்து பொறுப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வளர்ப்பதே இந்த சைக்கிள் பேரணியின் நோக்கமாகும். வாரத்தில் ஒரு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் உபயோகிப்பதை தவிர்த்து எரிபொருளை சேமித்து தேசத்தி;ன் வளர்ச்சியில் பங்குகொள்ள வேண்டும்.

500 சைக்கிள்கள்

 சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் சுமார் 500 சைக்கிள் ஓட்டிகள் பங்குபெற்றனர். சைக்கிள் பேரணி தென்னூர் உழவர் சந்தை அருகில் துவங்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சாலை, அரிஸ்டோ ரவுண்டானா, மதுரைமெயின் ரோடு, சென்னை நெடுஞ்சாலை, பாரதிதாசன் சாலை, முனிசிபல் அலுவலக சாலை, எம்.ஜி.ஆர் சிலை வழியாக மீண்டும் தென்னூர் உழவர் சந்தையில் முடிவடைந்தது.

பேரணியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், இந்தியன் ஆயில் தமிழ்நாடு மாநில அலுவலக முதன்மை பொது மேலாளர்கள், டி.ஜி.நாகராஜன்(லூப்ஸ்) வி.கோபால்கிருஷ்ணன் (ரீடேல் சேல்ஸ்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து