முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது சமக தலைவர் சரத்குமார் பேட்டி

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக திருச்செந்தூரில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

பேட்டி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 14ம் தேதி இடிந்த விழுந்த கிரி பிரகார மண்டபத்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்றுஇரவு பார்வையிட்டார். பின்னர் மண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த பேச்சியம்மாள் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பேச்சியம்மாளின் மகள் சுமதி, மகன் சுரேஷ் ஆகியோரிடம் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார். மேலும் படிப்பு செலவிற்கு உதவி செய்வதாக சரத்குமார் கூறினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து நேரில் கேட்டறிந்தேன். அங்கு உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். திருச்செந்தூரில் கோயிலில் கடந்த 14ம் தேதி பக்தர்கள் வரும் பிரகாரத்தில் மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. இதில் உயிரிழந்த பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரவித்துக்கொள்கிறேன். திருச்செந்தூர் முருகன் கோயில் சிறந்த சுற்றுலா மையமாகவும், ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது.  மண்டபம் இடிந்து விழுந்த இடத்தில் புதிய மண்டபம் கட்ட வேண்டும் பக்தர்கள் வலியுறுத்தி வருகிறேன். இக்கோயிலுக்கு நிறைய பக்தர்கள் வருகிறார்கள். தெய்வாதீனமாக பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இங்கு புதிய மண்டபம் கட்டினால் தான் பக்தர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படும்.மதுரவாயல் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய உயிரை பற்றி கவலைபடாமல் ராஜஸ்தான் சென்ற தமிழக போலீசாரை பாராட்டுகிறேன். அங்கு என்ன சூழ்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மரணம் நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. அது பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். என்னை பொறுத்தவரை அந்த சம்பவம் பற்றி முழுமையான விசாரணை நடக்கும் வரை எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. முழுமையாக விசாரணை பற்றி தெரிந்ததும் கருத்து கூறலாம்.  அங்கு எந்த சூழ்நிலையில் நடந்தது. பாதுகாப்பு குறைபாடா என்பது பற்றி விசாரணைக்கு பிறகு தான் முடிவு செய்ய முடியும். அதுவரை யாரும் கருத்து சொல்ல கூடாது.

அதிமுக வெல்லும்

உள்ளாட்சி தேர்தலை கண்டிப்பாக நடத்தியாக வேண்டும். அப்போது லோக்கல் டிபார்ட்மெண்ட் முறையாக வேலை செய்யும். பார்லிமெண்ட் தேர்தல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் பயணித்துவிட்டோம். மாபெரும் தலைவர் ஜெயலலிதா தலைமையில் நாங்கள் அவர்களோடு இருந்தோம். தற்போது எங்களது இயக்கத்தின் கொள்கை, கோட்பாடுகளை மக்களிடம் நேரடியாக கூறுகிறோம். வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவோம் போன்ற பல பாலிசிகள் உள்ளது. இப்போது மக்களிடம் நேரடியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். எங்களது நிலைபாடு குறித்து தேர்தலுக்கு பிறகு தெரிவிப்போம்.   இவ்வாறு சரத்குமார் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் சுந்தர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன், வடக்கு மாவட்ட செயலாளர் வில்சன், தூத்துக்குடி மாவட்ட தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயகோபால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்திகுமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாள் சோடா ரவி, ஒன்றிய மாணவரணி செயலாளர் காமராஜ் உட்பட கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து