முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.24,00,345 மதிப்பிலான நலத்திட்ட உதவி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று (18.12.2017) நடைபெற்றது.

குடும்ப அட்டை

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 385 மனுக்களை பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அவர்களின் தன் விருப்ப நிதியிலிருந்து சுய தொழில் தொடங்க தஞ்சாவூரை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு ரூ.20,000த்திற்கான காசோலையினையும், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டிணத்தைச் சோந்த (லேட்) அன்பரசன் சோமு என்பவர் குவைத் நாட்டில் பணியில் இருந்த போது இறந்தயொட்டி சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத் தொகை அவரது மனைவி புனிதா என்பவருக்கு ரூ.23,80,345க்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம் சார்பில் 24 மணி நேரம் 104 மருத்துவ உதவி சேவை 4ம் ஆண்டு தொடக்கத்தினை முன்னிட்டு பொது மக்களிடையே 104 மருத்துவ சேவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் பொது மக்களுக்கு வழங்கினார். இச்சேவையின் மூலம் மருத்துவ தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த புகார்களை பொது மக்கள் 104 கட்டணமில்லா தொலைபேசி பயன்படுத்தி தெரிவிக்கலாம். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரவிச்சந்திரன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பாபு, மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து