முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் கஸ்தூரிபாய் ரெடிமேட் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      கடலூர்
Image Unavailable

கஸ்தூரிபாய் என்.எம்.பி. ரெடிமேட்ஸ் அறக்கட்டளை மற்றும் உரத்த சிந்தனை அமைப்பும் இணைந்து பாரதியார் பிறந்தநாள் விழா சிதம்பரம் மேலவீதியில் உள்ள பலகாரம் டாட்காம் அரங்கில் நடைபெற்றது.

பரிசுகள்

விழாவிற்கு மூத்த வழக்கறிஞர் சம்பந்தம் தலைமை தாங்கினார். விழாவிற்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், உரத்த சிந்தனைப் பொருளாளர் நாகப்பன், துணைத்தலைவர் பத்மினிபட்டாபிராமன், உரத்த சிந்தனைஇணைச்செயலாளர் பாலசாண்டில்யன், துணைப்பொருளாளர் கணேஷ்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எம்,பி. அறக்கட்டளை துணைஅறங்காவலர் ஸ்ரீவித்யாமுத்துக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் சிதம்பரத்தைச்சேர்ந்த வீனஸ், காமராஜ், எடிசன், ஆக்ஸ்போர்டு, அரசுநந்தனார், ராமசாமி செட்டியார் உள்ளிட்ட பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு பாரதியார் பற்றிய கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுபோட்டி, மாறுவேடப்போட்டிகள் நடத்தப்பட்டது.  கஸ்தூரிபாய் ரெடிமேட்ஸ் நிர்வாகஇயக்குனரும், என்.எம்.பி. அறக்கட்டளை அறங்காவலருமான விவேகானந்தன்முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து