முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

 உரிமைகள்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவதுதமிழக அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடத்தப்பட்டு அன்றையதினம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர்களாக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில் செய்வதற்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தனிநபர் கடன்,கல்விக் கடன், சிறுபான்மை சுய உதவிக்குழு கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் வழஙகப்பட்டு வருகிறது.சிறுபான்மையினர்கள் தமிழக அரசின் கடனுதவிகள் குறித்து அறிந்து பயன்பெற்று மற்றவர்களுக்கும் இத்திட்டங்கள் குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

அதனைத்தொடர்ந்து 2 நபர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகைக்கான மின்னியல் பட்டுவாட ஆணையும், 2 நபர்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகைக்காக மின்னியல் பட்டுவாட ஆணையும், 1 நபருக்கு ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மின்னியல் பட்டுவாட ஆணையும்,8 நபர்களுக்கு தலா ரூ. 8 ஆயிரம் வீதம் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான மின்னியல் பட்டுவாட ஆணையும், வேளாண்மைத்துறை சார்பில் 10 நபர்களுக்கு ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 300 மதிப்பிலான உழவுக்கு மானியம், பைப் லைன் ,பேட்டரி ஸ்பிரேயர் உள்ளிட்ட வேளாண்மைத்துறை கருவிகளும் ஆக மொத்தம் 21 நபர்களுக்கு ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன்,கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் காந்திநாதன், மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இருதயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து