முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமத் தூய்மை தின உறுதி மொழி ஏற்பு

புதன்கிழமை, 20 டிசம்பர் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மானாம்பதி உட்பட 73 ஊராட்சிகளில் துய்மை பாரத இயக்கத்திட்டத்தின் கீழ் கிராமத் தூய்மை தின சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.

பராமரிப்பு

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், பரணி ஆகியோர் தலைமை தாங்கினர். தூய்மை பாரத இயக்கத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர்கள் பாலசுப்பரமணியன், கன்னியப்பன் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் கிராமப்புறங்களில் திறந்த வெளியில் மலம், ஜலம் கழிக்கும் பழக்கத்தினை முற்றிலும் ஒழித்திட வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள பொது இடங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கவிடாமலும், பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தாலும், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக பராமரித்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

நிகழ்ச்சியினைத் தொடர்ந்து கிராம மக்கள் தூய்மை பாதுகாப்போம் என்பது குறித்த உறுதிமொழி பொது மக்கள் ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து