முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் ரூ. 65 கோடியில் கிரிவலப்பாதை அகலப்படுத்தும் பணி: கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ரூ. 65 கோடியில் 14 கி.மீ. தூரம் கிரிவலப் பாதை அகலப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாதை அகலப்படுத்தும் பணி

நெடுஞ்சாலை துறை சார்பில் திருவண்ணாமலை கிரிவலப் பாதை அகலப்படுத்தும் பணி மற்றும் மேம்பாட்டு பணி ரூ. 65 கோடியில் நடைபெற்றுவருகிறது. இந்த பணியினை நேற்று மாலை கிரிவலப் பாதை (காஞ்சிரோடு) அபய மண்டபம் அருகில் தொடங்கி அண்ணா நுழைவு வாயில் வரை நடைபெற்றுவரும் கல்வெட்டு, கால்வாய், நடைபாதை பிளாட்பார்ம், மின்விளக்கு போன்ற பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிரிவலப் பாதையிலுள்ள மரங்களை மார்க் செய்யவும் ஸ்ரீ லோகமாதா அகஸ்தியர் சபை எதிர்புறமுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், இலங்கை அகதிகள் முகாம் அருகில் உள்ள நீரேற்றும் அறையை அகற்றவும், குபேர லிங்கம் எதிரே ஆலமரக்கிளைகளை (காய்ந்த மரம்) கிளைகளை அகற்றவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,சமீபத்தில் ரமணா ஆசிரமம் அருகே சுவர் இடிந்து விழுந்து பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண தொகை தலா ரூ. 1.50 லட்சம் கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், ஒப்பந்ததாரர் மூலம் தலா ரூ. 2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், கிரிவலப் பாதை அகலப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் த.பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் என்.பூபாலன், தாசில்தார் ஆர்.ரவி, வருவாய் ஆய்வாளர் கே.மணிகண்டன், சாலை ஆய்வாளர் பச்சையப்பன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து