முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 72 பயனாளிகளுக்கு ரூ.17.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், வழங்கினார்

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஒன்றியம் அத்திப்புலியூர் ஊராட்சியில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் நேற்று (21.12.2017) நடைபெற்றது.

சிறு கண்காட்சி

இம்மக்கள் தொடர்பு முகாமில் தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் சிறுகண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர். இம்மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பேசியதாவது: " இந்த மக்கள் தொடர்பு முகாம் இந்தியாவிலேயே முதன் முறையாக 1969 முதல் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மாதம்தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில்; மக்கள் தொடர்பு முகாம்; நடத்தப் பட்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் துறை சார்ந்த பல திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்களே மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனுக்களை அளித்து அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றார்.

நலத்திட்ட உதவிகள்

இம்முகாமில் வருவாய்த் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாவும், முதியோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் முதியோர், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை உதவித்தொகைக்கான ஆணையினையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 28 பேருக்கு ரூ.3 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகையும், தாட்கோ நிறுவனம் சார்பில் 4 பேருக்கு ரூ.3.11 லட்சம் மதிப்பிலான தனிநபர் கடனுக்கான மானியமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.7,500 மதிப்பிலான மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகையும், வேளாண்மைத்துறை சார்பில் 12 பேருக்கு ரூ.63900 மதிப்பிலான பசுந்தாள் உரப்பயிர் விதைகள் மற்றும் உபகரணங்ளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.5130 மதிப்பிலான தோட்டப்பயிர் விதைகளும் ஆக மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ.17.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர்(சமூகப் பாதுகாப்புத்திட்டம்) எம்.வேலுமணி, வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், இணை இயக்குநர்(வேளாண்மை)விஜயகுமார், இணை இயக்குநர்(கால்நடை பராமரிப்புத்துறை) கோவிந்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டாட்சியர் மணிவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து