முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதாரம் அதிகரிக்கும்: விவேக் தேவ்ராய்

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் ரூ.448 லட்சம் கோடியாக ( 7 லட்சம் கோடி டாலர்) அதிகரிக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் தலைவர் விவேக் தேவ்ராய் வியாழக்கிழமை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,  உலகப் பொருளதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. இதையடுத்து, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 6.5 லட்சம் கோடி டாலர்- 7 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும். செலாவணி விகிதத்தை பொருத்தவரையில் இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் வரும் 2035-40ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் 10 லட்சம் கோடி டாலரை எட்டிவிடும். அதேசமயம், செலாவணி மாற்று விகிதம் சாதகமான அளவில் அதிகரிக்கும்பட்சத்தில் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பை இந்தியா 2035ஆம் ஆண்டுக்கு முன்னரே பெற்றுவிடும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து