முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேட்டலோனியா நாடாளுமன்ற தேர்தலில் பிரிவினைவாதிகள் மெஜாரிட்டியை நிரூபித்தனர்

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

மெட்ரிட்: கேட்டலோனியா மாகாணத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரிவினைவாதிகள் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்பெயினிடம் இருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற கேட்டலோனியா, தனி நாடாக தன்னை பிரகடனப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்பெயின் அரசு, கேட்டலோனியா நாடாளுமன்றத்தை கலைத்தது. அதிபர் கார்லஸ் பூஜ்டிமாண்டையும் பதவியில் இருந்து நீக்கியது.

இதற்கிடையில் நடந்து முடிந்த கேட்டலோனியா நாடாளுமன்றத் தேர்தலில் கேட்டலோனியா தனி நாடு ஆதரவு கட்சிகளான ஒருங்கிணைந்த கேட்டலோனியா, கேட்டலோனியாவின் இடது குடியரசு கட்சி மற்றும் பாப்புலர் யூனிட்டி ஆகியவை இணைந்து மொத்தமுள்ள 130 இடங்களில் 70 இடங்களை வென்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.

இந்த தேர்தல் வெற்றி குறித்து கேட்டலோனியா முன்னாள் அதிபர், கார்லஸ் பூஜ்டிமாண்டை கூறியபோது, "கேட்டலோனியா குடியரசு வென்றது. ஸ்பெயின் அரசு தோற்கடிக்கப்பட்டது. ஸ்பெயின் பிரதமர் மரியானோ ராஜோய் மற்றும் அவரது கூட்டாளிகளும் தோற்கடிக்கப்பட்டனர்” என்றார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் ஸ்பெயின் அரசுக்கு மீண்டும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து