முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித் ஷா மகனின் நிதி முறைகேடுகள் குறித்த கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பா.ஜ.க தலைவர் அமித் ஷா மகனின் நிதி முறைகேடுகள் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை என்றும் பாஜகவுக்கு மட்டுமெ ஒரு சினிமா கம்பெனி இருந்திருந்தால் அதற்கு ''லை ஹார்டு' என்றே பெயரிருந்திருக்கும் என ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

டை ஹார்டு என்பது பிரபல ஹாலிவுட் சினிமா. அந்தப் பெயரை சார்ந்து லை ஹார்டு என ராகுல் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக  காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவரது தலைமையில் முதல்முறையாக அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

"குஜராத் மாதிரி வளர்ச்சி என்பதே பொய்யானது. குஜராத் மக்களிடம் நான் பேசும்போது வளர்ச்சியே இல்லை என்று தெரிவித்தனர். பாஜகவின் அடித்தளமே பொய்யானது. பாஜக தலைவர் அமித் ஷா மகனின் நிதி முறைகேடுகள் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை.
- ராகுல் காந்தி

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "குஜராத் மாதிரி வளர்ச்சி என்பதே பொய்யானது. குஜராத் மக்களிடம் நான் பேசும்போது வளர்ச்சியே இல்லை என்று தெரிவித்தனர். பாஜகவின் அடித்தளமே பொய்யானது. பாஜக தலைவர் அமித் ஷா மகனின் நிதி முறைகேடுகள் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உண்மை வெளியே வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை பாஜக திரித்துக் கூறியது" என்றார்.

இந்நிலையில், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜகவுக்கு மட்டுமெ ஒரு சினிமா கம்பெனி இருந்திருந்தால் அதற்கு ''லை ஹார்டு' என்றே பெயரிருந்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து