முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதாலாவுக்கு 2 வாரம் பரோல்: டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

சண்டிகர்: ஆசிரியர் தேர்வு வாரிய ஊழலில் 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும் அரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று 2 வாரம் பரோல் வழங்கியது.

சவுதாலாவின் மனைவி ஸ்நேகலதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிர்சா நகர மருத்துவ மனையில் உள்ளார். அவருடன் சிறிது காலம் இருக்க நீதிமன்றம் பரோல் வழங்கியது. எனினும் நகரை விட்டு வெளியேறவும் பிற நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டது.

முன்னதாக மனைவியை கவனித்துக் கொள்ள சவுதாலாவுக்குப் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் அமித் சஹானி மனு தாக்கல் செய்தார். அதற்கு டெல்லி காவல் துறை எதிர்ப்பு தெரிவித்தது.

“ஸ்நேகலதாவை கவனித்துக்கொள்ள குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். சவுதாலாவுக்கு ஏற்கெனவே பரோல் வழங்கப்பட்டபோது, அவர் அரசியல் கூட்டங்களில் பங்கேற்றார். இதனால் அவரது பரோல் ரத்து செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் பரோல் ரத்து நடவடிக்கைக்கு எதிரான சவுதாலாவின் அப்பீல் மனு மீது, வரும் காலத்தில் அவரது பரோல் மனுவை பரிசீலிக்கலாம் என டிவிஷன் பெஞ்ச் கூறியதன் அடிப்படையில் பரோல் வழங்குவதாக நீதிபதி முக்தா குப்தா தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து