முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டில் கழிப்பறை இருக்கும் மாணவர்களுக்கே பள்ளியில் மதிப்பெண் தாள் தரப்படும் மேற்கு வங்கத்தில் பள்ளிவாரியம் புது உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா: வீட்டில் கழிப்பறை இருக்கும் சான்று இருந்தால்தான் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் தாள் தரப்படும் என்று மேற்கு வங்கத்தில் உள்ள மாவட்ட பள்ளி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மிஷன் நிர்மல் பங்க்ளா என்ற திட்டம் மேற்கு வங்கத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தண்ணீர் மற்றும் கழிவுகளால் ஏற்படும் குழந்தை இறப்பு மற்றும் நோய்த்தொற்று ஆகியவற்றை ஒழிக்கவே இந்த திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் மிஷன் நிர்மல் பங்க்ளா என்ற திட்டம் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதை உறுதி செய்ய, வீட்டில் கழிப்பறை இருக்கிறது என்பதற்கான சான்று இருந்தால்தான், அந்த வீட்டுக் குழந்தையின் மதிப்பெண் தாள் தரப்படும் என்ற உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாவட்டத்திலுள்ள மாவட்ட பள்ளி வாரியத்தின் மூலம் இந்தப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி,330 பள்ளிகளுக்கு மேல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து