முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சலப்பிரதேச மாநில முதல்வராக பா.ஜ.க.வின் ஜெய்ராம்தாக்கூர் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

சிம்லா :  இமாச்சலப்பிரதேச மாநில முதல்வராக பா.ஜ.க.வின் ஜெய்ராம்தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது .

இமாச்சலப்பிரதேச தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்ற போதிலும் முதலமைச்சர் வேட்பாளராக பிரேம் குமார் துமல் தோல்வியை தழுவியுள்ளார்.

இதை தொடர்ந்து மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இமாச்சலத்தை சேர்ந்தவர் மட்டுமல்ல அம்மாநில அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை நன்கு அறிந்தவர்.

எனவே அவர் முதலமைச்சராக அறிவிக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டது.  இந்நிலையில் இமாச்சலப்பிரதேச மாநில முதல்வராக பா.ஜ.கவின் ஜெய்ராம்தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து