முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணமதிப்பு நீக்கத்துக்கு பின்னர் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  பணமதிப்பு நீக்கத்துக்குப் பின்னர் வரித் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 19.5 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் நவம்பர் மாதம் வரையில் வரித் தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 3.89 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் 3.25 கோடி பேர் வரி தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக அளித்த பதில் நிதித்துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா இந்த தகவலை தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டில் நவம்பர் மாதம் வரை 3.25 கோடி பேர் வரி தாக்கல் செய்திருந்தனர். ஆனால் நடப்பாண்டில் 3.89 கோடியாக இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இது ஒப்பீட்டளவில் 19.5 சதவீதம் வளர்ச்சியாகும் என்று கூறி னார். நடப்பாண்டில் நவம்பர் மாதம் வரை மத்திய அரசின் நேரடி வரி வருவாய் ரூ. 4.80 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் கிடைத்த ரூ. 4.20 லட்சம் கோடி வரி வருவாயைவிட 14.3 சதவீதம் அதிகமாகும்.  2017 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 275 நபர்களிடமிருந்து கணக்கில் காட்டாத ரூ. 7,800 கோடி கண்டறியப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து