முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பறக்கிறது ஏர் டெக்கான்

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : இந்தியாவின் முதலாவது குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்டெக்கான் தனது சேவையை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. சிறிய நகரங்களை விமானம் மூலம் இணைக்கும் மத்திய அரசின் `உதான்’ திட்டத்தின் கீழ் மும்பையிலிருந்து ஜல்கோவ்னுக்கு விமான சேவையை தொடங்கியது.

மும்பையிலிருந்து 410 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஜல்கோவ்னுக்கு பிற்பகலில் தனது முதலாவது பயணத்தை இந்நிறுவன விமானம் தொடங்கியுள்ளது. திட்டமிட்டபடி சனிக்கிழமை மாலை 6.20 மணிக்கு புணே-நாசிக் இடையே இந்த விமானம் இயக்கப்பட்டது.

18 பேர் பயணிக்கும் வகையிலான பீச் கிராஃப்ட் 1900டி ரக விமானங்களை சிறிய நகரங்களை இணைப்பதற்கான சேவையில் இந்நிறுவனம் ஈடுபடுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தில் கேப்டன் அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜி.ஆர். கோபிநாத் 2003-ம் ஆண்டு ஏர் டெக்கான் நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் 2007-ம் ஆண்டில் கிங் பிஷர் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். கிங் பிஷர் நிறுவனம் நலிவடைந்து விமான சேவையை நிறுத்தியது. இதனால் மீண்டும் ஏர் டெக்கான் என்ற பெயரில் விமான சேவையை கோபிநாத் தொடங்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து