முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடி நிர்வாகம் சார்பில் காட்பாடி காந்தி நகரில் எம்ஜிஆரின் வெங்கல சிலை: வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      வேலூர்
Image Unavailable

 

காட்பாடி காந்திநகரில் விஐடி நிர்வாகம் சார்பில் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரத ரத்னா எம்ஜிஆரின் திருஉருவ வெங்கலச் சிலையினை அவரது 30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் திறந்து வைத்தார். இதில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ். விசுவநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

வெங்கலச் சிலை

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் இதயங்களில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா மறைந்த எம்.ஜி.ஆரின் அளப்பரிய மக்கள் நலப் பணிகளை இன்றும் மக்கள் மனதில் நினைத்து போற்றி வருகின்றனர்.

அவைகளில் ஒன்றான கல்விக்காக தொலை நோக்கு பார்வையுடன் அவர் கொண்டு வந்த கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் இன்று ஆலமரம் போன்று விழுது விட்டு தழைத்தோங்கி கல்வி சேவை ஆற்றிவருகின்றன அவற்றில் ஒன்றாக விஐடி விளங்குகின்றது.

எம்ஜிஆரின் சிறப்பைவெளிபடுத்தும் வகையில் காட்பாடி காந்திநகர் ஓடை பிள்ளையார் கோயில் எதிரில் விஐடி நிர்வாகம் சார்பில் ரூ. 20 லட்சம் செலவில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் திருஉருவ வெங்கலச் சிலை அழகிய பூங்கா வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பங்கேற்று எம்ஜிஆரின் திருஉருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ, ஜி.லோகநாதன் மற்றும் எம்ஜிஆர் விசுவாசிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து