முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துமாலுக்கு கவர்னர் பதவி: பா.ஜ.க. சமரசம்

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

சிம்லா, சமீபத்தில் நடந்த பஞ்சாப், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 48 இடங்களை பா.ஜ.க வென்றுள்ளது. முன்கூட்டியே முதல்வர் வேட்பாளரை அறிவித்து பா.ஜ.க. தேர்தலை சந்தித்தது. 3 முறை முதல்வராக இருந்த பிரேம்குமார் துமால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் எம்.எல்.ஏ தேர்தலில் அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோல்வி அடைந்தார்.  எனவே அவரை முதல்வராக தேர்வு செய்ய பா.ஜ.க மேலிடம் முன்வரவில்லை. புதிய முதல்வரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஆனால் தோல்வியுற்றாலும் முதல்வர் பதவிக்கு வர பிரேம்குமார் விரும்பினார். அவரது ஆதரவாளர்களும் அவரை தேர்வு செய்ய விரும்பினர். ஆனால் கட்சி மேலிடம் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

இந்த நிலையில் கட்சி மேலிடம் துமாலுக்கு கவர்னர் பதவி தருவதாக வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும் துமாலின் மகன் அனுராக் தாகூர் எம்.பியாக இருக்கிறார். துமால் கவர்னர் பதவியை விரும்பவில்லை என்றால் அவருடைய மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாகவும் உறுதி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து துமால் தனது எண்ணத்தை கைவிட்டார். முதல்வர் பதவிக்கு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, முன்னாள் மாநில அமைச்சர் ஜெயராம் தாகூர் ஆகியோர் போட்டியில் இறங்கினார்கள். இறுதியாக ஜெயராம் தாகூர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே பிரேம்குமார் துமால் கூறும் போது, நான் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. கட்சியிடம் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. கட்சி எந்த முடிவு எடுத்தாலும் அது சம்பந்தமாக நான் கேள்வி எழுப்ப மாட்டேன். கட்சி என்ன சொல்கிறதோ அதை நான் செய்வேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து