முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குல்பூஷண் ஜாதவுடன் தாய், மனைவி சந்திப்பு

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் குல்பூஷண் ஜாதவின் தாய் மற்றும் மனைவி பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை அவரது தாய், மனைவி சந்தித்து பேசினர்.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் (47) ஈரானின் சாபஹர் துறைமுகத்தில் வர்த்தகம் செய்து வந்தார். அவர் வர்த்தக விஷயமாக பாகிஸ்தான் சென்ற போது, அந்நாட்டு உளவு துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கடத்தி கைது செய்தனர். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும் சதி திட்டங்கள் தீட்டியதாகவும் குற்றம் சாட்டி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இந்திய தூதரகம் சார்பில் ஜாதவுக்கு சட்ட உதவி வழங்கவும் குடும்பத்தினர் அவரை சந்திக்கவும் பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்து வந்தது.

பாக். ஒப்புதல்::

இந்நிலையில் சர்வதேச நிர்பந்தம் காரணமாக ஜாதவின் மனைவி அவரை சந்தித்துப் பேச பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. பின்னர் இந்தியாவின் வலியுறுத்தல் காரணமாக ஜாதவின் தாயார் மற்றும் இந்தியத் தூதரும் உடன் செல்ல அனுமதி வழங்கியது.  அதன்படி ஜாதவின் தாயாரும் மனைவியும் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றனர். இந்தியாவில் இருந்து இஸ்லாமாபாத் விமான நிலையம் வந்தடைந்த அவர்கள் பின்னர் இங்குள்ள இந்திய தூரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து, அங்கிருந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலம் சென்றனர். ஊடகங்களுக்கு பேட்டியளிக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களுடன், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் ஜே.பி.சிங்கும் சென்றார். அங்கு அரை மணிநேரம் காந்திருந்தனர்.

சந்திப்பு:

அதன்பின் அங்கு அழைத்து வரப்பட்ட குல்பூஷண் ஜாதவை, இருவரும் சந்தித்து பேசினர். இதனை, அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது பாசில் தெரிவித்துள்ளார். எனினும் விரிவான விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. சிறையில் இருந்து குல்பூஷண் எப்போது அழைத்து வரப்பட்டார், எவர் எங்கு தங்க வைக்கப்பட்டு இருந்தார் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து