முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே மிக சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை மைக்ரோஸ்கோப் மூலம் பார்க்கலாம்

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

லண்டன், உலகிலேயே மிக சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டை 15 மைக்ரோ மீட்டர் அகலமே உடையது. 20 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்டது. மிக சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை அதிக சக்திவாய்ந்த மைக்ரோஸ்கோப் மூலமே பார்க்க முடியும். அப்போதுதான் அதில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படிக்க முடியும். இது பிளாட்டினத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மீது சிலிகான் நைட்ரேட் முலாம் பூசப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மூலமே இதை பயன்படுத்த முடியும். உலகிலேயே மிக சிறிய அளவிலான கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை என சாதனை படைத்துள்ள இதை இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் டேவிட்காஸ், கென்மிஸ்கார்ட் ஆகியோர் உருவாக்கி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து