முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களில் பனி மூட்டம்: 17 ரயில்கள் ரத்து

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனியும் குளிரும் நிலவுகிறது. பனியால் டெல்லி, உ.பி., பிகார், அரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 19 ரயில்கள் தாமதமாகச் சென்றன. 6 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. டெல்லியில் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு 800 மீட்டர் தூரத்துக்கு மேல் பார்க்க முடியாதபடி பனி மூட்டம் இருந்தது. குறைந்தபட்ச வெப்ப நிலை 6.3 டிகிரி செல்சியசாக இருந்தது. உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் பனி மூட்டம் காரணமாக படான் மாவட்டம் உஜ்ஹான் என்ற இடத்தில் வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேன் டிரைவர் பலியானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து