முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா கோலாகலம்

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணத் திருவிழா

கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஆரியங்காவு தர்ம சாஸ்தா சுவாமிக்கும் புஷ்கலா தேவிக்கும் ஜோதிரூப தரிசனம், நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், மண்டலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். முன்னொரு காலத்தில் சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி தனது மகள் புஷ்கலாதேவியுடன் ஆரியங்காவு பகுதிக்குச் சென்ற போது அங்கிருந்த தர்மசாஸ்தாவை புஷ்கலா தேவி விரும்பி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்று வருகிறது.திருவாங்கூர் மன்னர், தேவசம் போர்டார்,  சௌராஷ்டிரா மக்களை சம்பந்தி முறையில் அழைப்பிதழ் அனுப்பி கௌரவப்படுத்துகின்றனர். சௌராஷ்டிரா சமூகத்தினர் ஆரியங்காவு தேவஸ்தான சௌராஷ்டிரா மகா ஜன சங்கம் மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தி சம்பந்தி உறவு முறையில் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று திருவிழாவினை நடத்தி வருகின்றனர்.இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. தொடர்ந்த ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 23ம் தேதி ஜோதி ரூப தசிசனம் நடைபெற்றது. அன்று அதிகாலையில் அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் ஆரியங்காவு மக்கள் ஜோதிக்கு வரவேற்பு அளித்தல், இரவ அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாம்பழத்துறையில் இருந்து பகவதி புஷ்கலா தேவிக்கு நறுமணப் பொருட்களால் மகாபிN~கம் செய்யப்பட்டது. பின்ன்ர் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மணமகளுக்குரிய சர்வ அலங்காரம், பொங்கல் படைப்பு உற்சவதாரம் நடைபெற்றது. அம்மன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  கர்ப்பகிரகத்தில் இருந்து அம்பாள் ஜோதி ரூபத்தை தந்திரி, சௌராஷ்டிரா சமூகத்தினரிடம் வழங்கினார். சன்னதி சந்திரி ஜோதி ரூபத்தை பூஜை வழிபாடு செய்து கர்ப்பகிரகத்தில் கொண்டு சென்று ஐயப்பனின் ஜோதியோடு ஐக்கியமாக்கினார். கடந்த 24ம் தேதி பாண்டியன் முடிப்பு என்னும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாலையில் தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், சன்னிதானம் முன் துவங்கியது. இதில் அம்பாள் சார்பில் சௌராஷ்டிராவினர் 21 தட்டுகளில் நிச்சயதார்த்த சடங்குகளுக்க உரிய பொருட்களுடன் ராஜகொட்டாரம் வந்தனர். தர்மசாஸ்தா சார்பில் திருவாங்கூர் தேவசம் போர்டார் 3 தட்டுகளை கர்ப்ப கிரகத்தில் இருந்துஎடுத்து வந்து ராஜகொட்டாரத்தில் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. தர்மசாஸ்தா ராஜ அலங்காரத்தில் பவனி வந்தார்.விழாவின் முக்கிய நேற்று (25ம் தேதி) காலையில் அபிஷேம், வஸ்திரங்கள் சாத்துப்படி, பொங்கல் படைப்பு, மதியம் சம்பந்தி விருந்து, மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து