முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூருவுக்கு தனி ‘லோகோ’ கர்நாடக அரசு வெளியிட்டது

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூர் :  நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூரு மாநகருக்கு தனியாக இலச்சினை (லோகோ) ஒன்றை, கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கர்நாடக சுற்றுலாத்துறை சார்பாக பெங்களூருவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் வீதியில்  ‘நம்ம பெங்களூரு திருவிழா’ நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தொடங்கி வைத்த இந்த விழா காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. இதில் பெங்களூரு வின் கலை, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இதையடுத்து, சட்டப்பேரவை வாயிலில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூரு மாநகருக்கான இலச்சினையை அறிமுகப்படுத்தினார். அப்போது பிரியங்க் கார்கே பேசும்போது, ‘‘நியூயார்க், பாரிஸ், லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நகரங்களின் வரிசையில், இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரு மாநகருக்கு என தனியாக இலச்சினையை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பெங்களூரு இந்தியாவில் உள்ள மாநகரங்களின் பட்டியலில் முன்னணி இடத்தை பிடிக்கும்.

இதன் மூலம் உலக அளவில் பெங்களூருவுக்கு தனி ‘பிராண்ட்’ உருவாக்கப்பட்டு, அதன் மதிப்பு உயர்த்தப்படும். இத்தகைய முயற்சியால் சுற்றுலாத்துறை பெங்களூருவில் மிக வேகமாக வளரும். பன்னாட்டு நிறுவனங்கள் பெங்களூருவை நோக்கி வரும் சூழல் உருவாக்கப்படுவதால் இங்கு வேலைவாய்ப்பு பெருகும். இதன் மூலம் கர்நாடகா பொருளாதார ரீதியாக மிகவும் வேகமாக முன்னேறும்’’ என்றார். புதிய இலச்சினை பேரவை வளாகம் முன்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து