முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் வேதங்களுக்கு காட்சியருளும் விதியபாத விழா

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      நாகப்பட்டினம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் வேதங்களுக்கு காட்சியருளும் விதியபாத விழாயொட்டி வேதாமிர்தஏரியில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

தீர்த்தவாரி

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் அகஸ்தியருக்கு திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சியருளிய பெருமையுடைய ஸ்தலமாகும் ரிக், யசூர், சாம, அதர்வன வேதங்கள் வழிபட்ட ஸ்தலமாகும் இங்குள்ள இறைவனை வழிபட்ட வேதங்கள் தங்களின் பெயரிலேயே இறைவன், இறைவி, ஊர், கடல், தீர்த்தங்கள், காடு அனைத்தும் அழைக்கப்பட வேண்டும் என் வேண்டிக் கொண்டன.அவ்வாறே அருளியதாக மறைக்காட்டீசர் தனூர் மாதத்தில் வேதங்களுக்கு காட்சியளித்து அருளினார் அதன்படி இறைவன் வேதாரண்யேஸ்வரர் என்றும் இறைவி வேதநாயகி என்றும், ஊர் வேதாரணியம் என்றும், கடல் வேதநதி என்றும் ஏரி வேதாமிர்தஏரி என்றும், காடு வேதவனம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வேதங்களுக்கு காட்சியருளிய நாள் ஒவ்வொரு ஆண்டும் தனூர் மாதத்தில் விதியபாத விழாவாக இத்தலத்தில் நடைபெற்று வருகிறது நான்கு வேதங்களும் புடைசூழ வேதாரண்யேஸ்வரர் சுவாமி தம்பதி சமேதராய் வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி நாகை ரஸ்;தா காசிவிஸ்வநாதர் கோவில் எதிரில் உள்ள வேதாமிர்த ஏரியில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது இதில்ஏராளமான பக்தர்கள் வேதாமிர்தஏரியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து