முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகதிகளுக்கு அடைக்கலம் அளியுங்கள்: உலக நாடுகளுக்கு போப் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாடிகன் :  அகதிகளுக்கு உலக நாடுகள் அடைக்கலம் அளிக்க வேண்டும் என்று கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடல் மார்க்கமாக அகதிகளாக துருக்கி, கிரீஸ் நாடுகளில் கரையேற முயற்சி செய்பவர்களை அந்த நாடுகளின் கடற்படைகள் நடுக்கடலில் விரட்டி அடிப்பதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
                                                                                                                                                                                                                 - போப் பிரான்சிஸ் 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் அகதிகளுக்கான வாசலை அந்த நாட்டு அரசுகள் அடைத்துள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடத்திய போப் பிரான்சிஸ் இந்த விவகாரம் குறித்து பேசினார்.

 அவர் கூறியதாவது:  சொந்த நாட்டை விட்டு வெளியேற யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் வன்முறையின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி அகதிகளாகி உள்ளனர். அவர்களுக்கு உலக நாடுகள் அடைக்கலம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய தரைக் கடலை கடந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

கடல் மார்க்கமாக அகதிகளாக துருக்கி, கிரீஸ் நாடுகளில் கரையேற முயற்சி செய்பவர்களை அந்த நாடுகளின் கடற்படைகள் நடுக்கடலில் விரட்டி அடிப்பதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

அண்மையில் மியான்மரில் இருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து