முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், வன்கொடுமை தொடர்பாக, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் கலெக்டர்இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்றது.

கண்காணிப்புக் குழுக்கூட்டம்

 பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர்களுக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் விதிகளின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழங்குகள் மீதான மெய்த்தன்மை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் சு.இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சக்ரபாணி, .பிரபு, தி.பெ.சீத்தாபதி சொக்கலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அருணாசலம், கள்ளக்குறிச்சி பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கு.பிரகாஷ்வேல், உதவி இயக்குநர் (வழக்கு நடத்துமை) ஜெ.செல்வராஜ், அரசு சிறப்பு வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி, காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ஜெ.சங்கர் (விழுப்புரம்), இளங்கோவன் (கோட்டக்குப்பம்), கே.ராதாகிருஷ்ணன் (உளுந்தூர்பேட்டை), சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (பொ) வீமராஜ், காவல் ஆய்வாளர் தி.எம்.கல்பனா மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர்கள், அலுவல் சார்ந்தஃ அலுவல் சாரா குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து