Idhayam Matrimony

ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு ஏற்பாடுகள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில், வரும் ஜனவரி 1-ம் தேதி ஏழுமலையான் கோயில் உட்பட, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடர்பான அனைத்து கோயில்களிலும் எந்தவித சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட மாட்டாது என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் இன்று அறிவித்தார்.

ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நடத்தப்படும் சிறப்பு ஏற்பாடுகளை ரத்து செய்ய வேண்டுமெனவும், அதற்குப் பதில், தெலுங்கு வருடப் பிறப்பான உகாதியன்று புத்தாண்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமெனவும் சமீபத்தில் ஆந்திர அறநிலையத் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பெரிய, சிறிய கோயில்களுக்கும், அறநிலைத்துறை ஆணையர்கள், துணை ஆணையர்கள், மேலாளர்கள் போன்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் உட்பட அனைத்து கோயில்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து நேற்று காலை, திருமலையில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முதல்வரின் உத்தரவின்பேரில், வரும் ஜனவரி 1-ம் தேதி ஏழுமலையான் கோயில் உட்பட தேவஸ்தானத்தின் பிற கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில், வரும் உகாதி பண்டிகைக்கு புத்தாண்டு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்'' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து