முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது சேலம் - எனது பெருமை” பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் எனது சேலம் - எனது பெருமை என்ற பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம் கலெக்டர் தலைமையில் நேற்று (26.12.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பேசியதாவது.

கருத்தரங்கம் 

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சேலம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வளர்ச்சி மேலும் வேகமாக வளர வேண்டுமென்றால் சமுதாய பங்களிப்பு மூலம் திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். எனது சேலம் எனது பெருமை என்ற கருத்தரங்கு சேலம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள பெரு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் சமுதாய பங்களிப்பு வழங்க வேண்டும். அவ்வாறு பங்களிப்பு வழங்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும், எவ்வாறு பங்களிப்பு கொடுப்பது, என்ன யுக்திகள் செய்ய வேண்டும் என்பதனை உங்களுக்கு விளக்கும் வகையில் இந்த கருத்தரங்கின் மூலம் அடித்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வளர்ச்சிக்கு சமூக பங்களிப்பு வழங்க எளிதாக இருக்கும்.

முக்கிய தேவைகள்

 இந்த கருத்தரங்கம் மூலம் மாவட்டத்தில் என்ன முக்கிய தேவைகள் உள்ளது, எதில் உங்களது பங்களிப்பை வழங்க முடியும் என்பது விளக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் எந்த பகுதிகளில் எந்த விதமான மக்கள் வசிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடியும். மத்திய மாநில அரசின் திட்டங்களுக்காக கூடுதல் பங்களிப்பும் வழங்கலாம்.

நமது மாவட்டம் சுற்றுலாதளங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். சுற்றுலாத்துறையில் பெரு நிறுவனங்கள் எவ்வாறு பங்களிப்பு வழங்கலாம் என்பது குறித்தும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, நதிகள் ஆகியவை குறித்தும் அவற்றில் எவ்வாறு பங்களிப்பு வழங்குவது என மின்திரை மூலம் விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளது. எனவே சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெரு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் சமுதாய பங்களிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வெற்றிவேல், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னத்தம்பி, கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் திருஅ.மருதமுத்து, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் துறை முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து