முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்பூஷன் ஜாதவின் மனைவிக்கு பாகிஸ்தான் அரசு செய்த கெடுபிடி

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

புதுடெல்லி,  குல்பூஷன் ஜாதவை பார்க்க சென்ற அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் அரசால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள். அவரது மனைவி அணிந்து இருந்த தாலியை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கழட்ட சொல்லி இருக்கின்றனர்.

பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கிறார் குல்பூஷன் ஜாதவ். இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்தவர் குல்பூஷன் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் இருந்த போது உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். இவரது மரண தண்டனை சர்வதேச நீதிமன்றத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஜாதவ் பெரும் போராட்டத்திற்கு பின் தன் குடும்பத்தினரை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் பாகிஸ்தான் அதிகாரிகளால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார். சேத்தன்குல்லின் தாலி, வளையல், தோடு ஆகியவற்றை கழட்ட சொல்லி உள்ளனர். இதுமட்டும் இல்லாமல் பாகிஸ்தானில் பெண்கள் இருப்பது போல் தலையை சுற்றி புடவையை சுற்றிக்கொள்ள சொல்லியுள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் தாய் மொழியில் பேசுவதற்கு கூட அனுமதிக்க படவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் இதுகுறித்து கூறும் போது ''பாதுகாப்பு காரணங்கள் கருதியும், எங்கள் நாட்டின் புரிதலுக்காகவுமே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது'' என்று கூறியுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து