முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லகண்ணு 93-வது பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் பிறந்தநாளையொட்டி மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. தமிழக அரசியல் களத்தில் மற்ற அரசியல் கட்சி தலைவர்களாலும், பொதுமக்களாலும் பெரிதும் மதிக்கப்படும் நல்லகண்ணு நேற்று தன்னுடைய 93வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவரின் பிறந்தநாளையொட்டி ஸ்டாலின் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும், சமூக நீதியை நிலை நாட்டவும், மதச்சார்பற்ற ஆட்சி தமிழகத்தில் அமையவும் நல்லகண்ணு தொடர்ந்து போராடி வருகிறார். அவரின் லட்சியத்தை நிலைநாட்ட நான் அனைவரும் பாடுபட வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

நல்லகண்ணுவிற்கு டி.டி.வி தினகரனும் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து