முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

107 வயது பாட்டிக்கு ராகுல் போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 107 பாட்டி ஒருவருக்கு போன் செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அந்த பாட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் போன் செய்து உள்ளார்.
இதுமட்டும் இல்லாமல் அவர் அந்த பாட்டிக்கு டிவிட்டரில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். தற்போது அந்த பாட்டியின் பேத்தி இதற்கு நன்றி தெரிவித்து டிவிட் செய்து உள்ளார்.

இந்த டிவிட்டர் விவாதம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. ராகுலின் பண்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராகி அறிவிக்கப்பட்டதில் இருந்து ராகுல் அரசியலில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விட்டார் என்று கூறலாம். அதற்கு முன்பே டிவிட்டரில் அவர் பல மக்களை கவர்ந்துவிட்டார். அவர் போடும் டிவிட்டுக்ள எல்லாம் வைரல் ஆகி வருகிறது. சில நாட்களுக்கு முன் தற்காப்பு கலை ஒன்றை கற்றுக் கொள்வது போல அவர் புகைப்படம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து