முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி பாடத்திட்டத்தில் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு இடம் பெறும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இடம் பெறும்

இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பாடத்திட்டத்தில் போற்றக்கூடிய தேசிய தலைவர்கள், அதேபோல் மாநிலத்தில் இருக்கின்ற எம்.ஜி.ஆர். வரலாறும் இடம் பெறும். பாடத்திட்டத்தில் 15 நாட்கள் கருத்துகள் கேட்கப்பட்டபோது 500க்கு மேற்பட்டோர் கருத்துகள் வழங்கியதில், 50 பேர் கூடுதலாக பாடங்களை சேர்க்க வேண்டும் என கூறியுள்ளனர். அதனையும் அரசு பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது.

நடவடிக்கை

பாலிடெக்னிக் தேர்வின் முறைகேட்டின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் உடனடியாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வில் யார் முறைகேடு செய்து இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேட்டில் ஈடுப்பட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த துறையில் டெண்டர் எடுத்தவரிடமும் அறிக்கை கேட்டுள்ளோம். மாநகர காவல்துறை ஆணையரிடம் 196 பேரிடமும் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும். காவல்துறையின் மூலம் எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து