முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே மண்டலம், ஒரே பாதை திட்டத்தில் ஆப்கன், ஈரான் நாடுகள் இணைக்கப்படும் சீன வெளியுறவு அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

சியோல்: “ஒரே மண்டலம், ஒரே பாதை திட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஈரான்நாடுகள் இணைக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

கடந்த 1500-ம் ஆண்டுகளில் பட்டுப்போன ‘பட்டுப் பாதை’ வர்த்தகத்துக்கு மீண்டும் உயிரூட்ட ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ என்ற பெயரில் சீனா புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி பாகிஸ்தானின் குவாதர் நகரில் மிக பிரம்மாண்ட துறைமுகத்தை சீனா நிர்மாணித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து குவாதர் துறைமுகத்துக்கு பிரம்மாண்ட நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்தில் இலங்கை, மியான்மரில் ஒப்பந்த அடிப்படையில் சீனா துறைமுகங்களை நிர்மாணித்து வருகிறது. இத்திட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் இணைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசியபோது, “ஒரே மண்டலம், ஒரே பாதை திட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஈரான்நாடுகள் இணைக்கப்படும்” என்றார்.

இந்த திட்டம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சலாஹுதின் ரப்பானி ஆகியோருடன் வாங் யீ நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

குவாதர் துறைமுக திட்டத்துக்கு போட்டியாக ஈரானின் சாபஹர் நகரில் பிரம்மாண்ட துறைமுகத்தை இந்தியா நிர்மாணித்து வருகிறது. இத்திட்டத்தில் இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இணைந்து செயல்படுகின்றன. இந்நிலையில் ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ திட்டத்தில் ஆப்கானிஸ்தானை இழுக்க சீனா முயற்சி செய்வது இந்தியாவுக்கு எதிரான காய் நகர்த்தலாகக் கருதப்படுகிறது.

சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கையில், தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து போரிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து